எனக்காக செல்லும்போது
கரடு முரடான சாலையில்
கூட
அழகாகத்தான் செல்கிறேன்
உனக்காக வரும்போது
ஒழுங்கான சாலையில்
கூட தடுமாறுகிறேன்
வார்த்தைக்கு வார்த்தை
பாதுகாப்புக்கு சொல்வதாக
சாலையை ஆட்டிவிடுகிறாய்…
உன்னை கொண்டுச் சேர்ப்பதற்குள்
விழுந்து காயப்பட்டுவிடுகிறது
பல தடவை மனசு
ச.சசிகுமார்.
Leave a Reply