காத்திருத்தல்
******************
நீள்வட்டத்தில் இந்த ஊர்
செல்வதாகத் தோன்றும்
ஆகாயத்திலிருந்து
எடுத்த படமாக
ஏதோ ஒரு கோணம் மனதுக்குள்
நீள்வட்டம் கோழிமுட்டையாகி
எக்கணமும் புதிய குஞ்சு ஓடு உடைத்து
எட்டிப்பார்க்கும் எனக் காத்திருக்கிறேன்
அதுவோ மூன்றாம் வகுப்பு மீசை சார்
பாதிப்பேர் சிலேட்டில்
அழுத்தமாக வட்டத்துக்குள்
வட்டமாகப் போட்டுவிடும்
பூச்சியமாகவே நிற்கிறது
என் பிரிய கோழிக்குஞ்சே
நீ எப்போது வரப்போகிறாய்?
..உமா மோகன்

