கவிதை: தேசமே விவசாயிதான் – பொள்ளாச்சி முருகானந்தம்தேசமே விவசாயிதான்….
—— ————————————
அந்த கடவுளுக்கான
சுண்டலும்
இந்த கடவுளுக்கான
அப்பமும்
இன்னொரு கடவுளுக்கான
கரும்புச் சக்கரையுமென…………
ஒற்றை அடையாளத்தின் கீழ்
கொத்து கொத்தாய்
ஒரு கூட்டம்
சாலைகளை அடைத்து
வீதிகளை அடைத்து
ஊர்களை அடைத்து
ஒட்டுமொத்தமாய் நிறைத்து
கிடக்கிறது…..
அதில்
செட்டியார்
கோணார்
மராட்டி
குஜராத்தி
எல்லா ஆத்திகளும் கலந்து கிடக்கிறது….
எந்த மதமோ
எந்த சாதியோ…..
ஆனால்
பின் புலத்தில்
கரும்புச்சக்கரையும்
அப்பமும்
சுண்டலுக்குமான ஆதிமூலம்
விவசாயிதான்…..
தேசமே
விவசாயிதான்…
கடவுளர்களுக்கு புரியும்……
— பொள்ளாச்சி முருகானந்தம்….