“தெரியாது என தெரிந்திருந்தால்” கவிதை – சாந்தி சரவணன்

“தெரியாது என தெரிந்திருந்தால்” கவிதை – சாந்தி சரவணன்




தர்மனுக்கு சூதாட்டம் ஆட
தெரியாது என தெரிந்திருந்தால்
மகாபாரதம் நடந்திருக்காது

மருத்துவனுக்கு மரணத்தை தடுக்க
தெரியாது என தெரிந்திருந்தால்
மருத்துவமனை பெருகியிருக்காது

ஓட்டுநருக்கு பேருந்து ஒட்ட
தெரியாது என தெரிந்திருந்தால்
விபத்துகள் நடந்திருக்காது

மனிதர்கள் நமக்கு எதுவுமே
தெரியாது என தெரிந்திருந்தால்
ஆணவத்தில் அழியமாட்டோம்

தெரியாது என தெரியாமல்
செய்யும் செயல்கள் தான்
தீமையில் முடிகிறது எனவும் தெரியாது!

எல்லாம் தெரியும்
என்ற அகந்தையை விடுத்து
ஆணவத்தை அகற்றி
அன்பை சூடி
தெரியாததைக் கற்று
தெரிந்ததை செயலாற்றி
வளமோடு வாழ்வோம்
மனிதத்தை காப்போம்

திருமதி. சாந்தி சரவணன்
9884467730

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *