கவிதை: *கொஞ்சும் நெருப்பு* – பொள்ளாச்சி முருகானந்தம்



கொஞ்சும் நெருப்பு
————————-———–

நெருப்பு சுடும்
நெருப்பு எரியும்
நெருப்பு கருகும்
நெருப்பு வேகும்
ஆனால் நெருப்பு கொஞ்சும்……

கர்ப்ப இருட்டில்
ஒரு நெருப்பின் இளஞ்சூட்டில்
நான் உயிரோடு கிடந்தேன்………….

கர்ப்ப முடிச்சில்
நான் இறுகிக் கிடந்த போது
அம்மாவின் கங்கு மூட்டிய வலியில்
நான் உயிரோடு கிடந்தேன்……..

அந்த தாயின்
ஒவ்வொரு நொடி அனல் மூச்சிலும்
நான் உயிரோடு கிடந்தேன்……

என் கடவுள் தவமிருந்து
கண்ணீரில் பற்ற வைத்த திரிவிளக்கின் இளஞ்சூட்டில்
நான் உயிரோடு கிடந்தேன்………..

என்னை வரமாக்கிய
தொப்புள் கொடியை அறுத்த போதிலான
அனல் எரிச்சலிலும்
நான் உயிரோடே கிடந்தேன்…….

என்னாலான சூடு
என்னாலான எரிச்சல்
எனக்கான கருகல்
எனக்காக வெந்த நொடி
எல்லாமும் தாண்டி……

“எம்மகன்னு கொஞ்சயில”
அந்த தீயைவிட
என்ன இனிதாய் இருந்து விட முடியும்.
கொஞ்சும் நெருப்பு……

பொள்ளாச்சி முருகானந்தம்……



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *