ஜார்ஜ் ஃபிளாய்ட்

மூச்சு முட்டுகிறது என்றால் அது உன்

நுரையீரலின் பலவீனம்.

கால்களில் நசுங்குமளவு

உன் கழுத்து என்ன

மெலிந்த மணிக்கட்டா?

இருபது டாலருக்கு

எத்தனை அடிமைகள் வாங்கலாமென்று

கணக்குச் சொல்லாமலே

திறந்துகிடந்தன உனது உதடுகள்

நீ புகைக்க நினைத்தது

வெள்ளை சிகரெட்டுகள் என்பதை

மறந்துவிடாதே

In Houston, 60,000 Join In Peaceful March For George Floyd

வெள்ளைநிறக் கால்களுக்கு

கொல்லத் தெரியாது

கறுப்புத்தோல் சப்பாத்துகள்

கண்ணியம் மீறுபவை.

மலையின் மூக்கிலிருந்து

வழிந்த காற்றின் அருவி

காய்ந்து போனதற்காக

வனவிலங்குகள் மரத்தின் நிழலில்

துயரத்தை அசைபோடுகின்றன

விலங்குகளிலிருந்து வேறுபட்டவர்கள்

மனிதர்கள்

ஜார்ஜ் ஃபிளாய்ட்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால்

கப்பலில் பயணம் செய்துவந்த

உனது மூதாதையர்களின்

எலும்புக் கூடுகளை

உனது சந்ததியர்கள்

சேகரித்து வைத்துக்கொள்ளட்டும்.

எத்தனை வருஷங்களானாலும்

இத்தாலி ஸ்டராம்போலி எரிமலைபோல்

அவற்றிற்குள் இருக்கும்

கறுப்பு இதயத்திற்குள்

கனைந்துகொண்டே இருக்கும்

கங்கு.

                 நா.வே.அருள்

One thought on “கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *