கவிதை: கடிதம் தொலைத்த காலம்….!! – வ செ தமிழினி

 

இதயத்தில் இருந்து பேசிய மனிதர்கள்

இருளில் மறைந்து விட்டனர்”

கணங்கள் கவர்ந்து – உதட்டில் நகைக்கும்

மனிதர்கள் உதட்டுச் சாயத்தால் உதாசீனப்படுத்துகிறார்கள்”

அன்பு பரிமாறும் வார்த்தைகள் – ஆளுக்கொரு

வர்ணங்களில் பூசப்படுகின்றன”

எண்ணங்கள் வெளிப்படும் மொழிகளில்

தனக்கென சுயநலம் தேடும் இனங்கள்

மனதால் உணர்ந்து கொள்ளவும் – மதியால்

ஞாபகம் கொள்ளவும் – நிற்காமல் செல்லும்

மேகமென ஆனது முகம்”

சிந்திக்கவும் செயல்படவும் தனக்கென வரிகள் வழிகாட்டியது – எதிர்ப்படும் வார்த்தைகள்

ஏமாந்து போகின்றன”

கடிதம் எழுதுவதால் என்ன நன்மை?மேற்கு ...

குட்டிக் கதைகளும் கும்மிப்பாட்டுகளும் தூங்க வைத்த குரல்கள் – அனாதை ஆசிரமங்களில்

நிரம்பின”

பொதுநலமான வாழ்வைத் தொலைத்து சுயநலமான கோடுகளை – தனக்கென ஒவியங்களாய் வரைந்துகொண்டன உறவுகள்

பாயும் நதிகளும் காக்கும் கடவுளும் – மனித சாதிகளால் கட்டுபடுத்திய காலம்”

வந்தோம் வாழ்ந்தோம் வழிகொடுத்தோம்

என்பதை காலம் பார்த்திட நடந்துவிடாதா”-என – எதிர்காலம் ஏக்கத்தில்”

கலாச்சாரம் காகிதத்திலும் – பண்பாடு சுவர்களிலும் அழுத்தமாய் ஒட்டிகொண்டது”

மெய்ஞானம் மறந்து விஞ்ஞான கூட்டம்

விதி மீறியது”

விளக்குத் திரி விழிகளின் முன் – நீண்ட வருடங்களுக்குப் பின்பு – கடிதம் ஒன்றை எழுதுவதற்கு – எத்தனைவார்த்தைகள் வெளிச்சத்தற்கு வரும் என – ஆழ்ந்து யோசித்த போது”

ஏமாந்து போனது கடிதமும்-காகித மனதும்”

 

  -வ செ தமிழினி