பல மனிதர்கள்
பல வாசனைகள்
ஒன்றுக்கொன்று
திணறடிக்க…
முகம் சுளிக்காமல்
சுவைத்துக் கொண்டிருந்தேன் …
ஆம்….
சக பயணியாய்.
அமைதியான மனிதர்கள் .
முழுக்க தெம்பற்ற தேகம்
கை காட்டுகிறார்.
பேருந்தும் நிற்கிறது.
திரும்பவும்
கை காட்டி போ….
என்கிறார்.
அடுத்த பேருந்து …
திரும்பவும்
கை காட்டுகிறார்.
பேருந்து நிற்கிறது.
போ…. என்கிறார்.
கொஞ்ச நேரம்
என் விநோதமான மனமும்
புரியாமல் திகைக்கிறது..
எத்தனை பேர்
இப்படி அலைகிறார்கள்
என நினைக்கையில்
சொட்டுச் சொட்டாய் மழை.
அவர் ஏனோ
நிறுத்த மறுக்கிறார்.
எழுதியவர்
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.