1
வளி துளைத்து
கனல்முற்றி
சிதையும் பிண்டங்களில்
கசியும் கரும்புகை
முட்டி மோதியலையும்
கிருதுமா நதிக்கரையில்
ஊருக்கோர் சுடுகாடு.
நெகிழிப் பைகள்
கழுத்தை நெறிக்க
திணறித் தான்
செல்கிறாள் கிருதுமா.
இடையிடையே
வகுடெடுத்த முகடுகளால்
இளைப்பாறும்
சிறுநாழிகையில்
வெளிச்சம் உமிழும்
சந்திர பலூன்
விரல்நுனி பிடித்து
தொடர்கிறாள் நெடிய இரவில்…
2
அவிழ்க்கும் வைகறை
கொடி அடுப்பில்
நிமிர்ந்து எரியும்
ஈரச் சுள்ளிகளின்
வெம்மை காய்ந்த
மார்கழிப் பிறப்பின்
ஞாயிறு மடியில்
தரை தட்டிய
புங்கைமரக் கிளையில்
தாயைப் பிரிந்த
மைனாக் குஞ்சுகளோடு
கட்டற்ற வெளியில்
இதமேற்றும்
வெம்மைக் கூதலை
திமிறி வரும்
சாணிப்பக்குகள்
நனைக்கின்றன
கொட்டடியிலிருந்து …
எழுதியவர்
அய்யனார் ஈடாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

