இரா. கலையரசியின் கவிதை

 

என்னவன் சுட்ட தோசை

அலுங்காமல் குலுங்காமல் இருந்தது மாவு.

மெல்ல கரண்டியின் விளிம்பு பட்டதும்,

காதலில் இளக ஆரம்பிக்கிறது.

சுழன்று ஆடும் காதலராய், சுற்றிப் பார்க்கிறது.

வெயிலுக்கு இணையாய் தோசை சட்டியும் தகிக்கிறது

காதலிலா? அனலிலா??

ஒரு கரண்டி மாவிற்குள் சிக்குகிறது இவளது மனது.

“சொய்ங் “” “சொய்ய்ங் ”
சத்தத்துடன் ஒரு காதல் சிணுங்கல்.

வட்ட நிலாவின் காதலாய் விரிகிறது மாவு.

புள்ளி வைத்து போடாத கோலமாய் மாவும் நானும் காதலில்!

பூமியின் சுற்றுப் பாதையாய் உன்னைச் சுற்றுகின்றன கண்கள்.

அள்ளி தெளித்த நெய்யில்,
உருகியது
நெய்யும்
என்
மெய்யும் ..

நாசிகளை வன்முறை செய்தன
நெய்யும், அவனது கையும்.

முறுகலாய், முத்த மிடுகிறது தோசையின் மீது ஆசை.

புரட்டிப் போட்ட புயலாய்
திருப்பிப் போட்ட தோசையில்,

அமிழ்ந்து எழ மறுக்கிறது காதல்

மண்ணில் பிறந்த குழந்தையாய்,
தட்டில் விழுந்தது தோசை.

சுட்டு வீழ்த்திய பெருமையில்,
வியர்வை முத்துகளைப்
பரிசளித்தன தோசை..

ஆசையாய்ப் பிய்த்து எடுத்த தோசையில்
பறக்கிறது தோசையின் ஆவியும்
என் காதலும்..

 

 

எழுதியவர் 

இரா. கலையரசி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *