தாறுமாறான சிந்தனை
ஓட்டத்தையும்
சிறிது ஒழுங்கு படுத்துகிறது
அந்த
கருப்புத் தார்ச் சாலையின்
வெள்ளைக் கோடுகள்….
*
அமிலங்களால் நீல லிட்மஸ் தாள்களை
சிவப்பாக்க தான் முடிகிறது…
ஆனால்
உன் பார்வையால்
ஒரு ஜென்மத்தையே
எரிக்க முடிகிறது…
*
“புறத் தூய்மை நீரினால் அமையும்”,
ஆமாம் உண்மை தான்,
ஒரு தூய்மையினால் மட்டுமே
இன்னோரு தூய்மையை
உருவாக்க முடியும்,
*
சிதிலமடைத்த பழைய
வீடுகள்
இன்னும் சுமந்துக் கொண்டிருக்கிறது…
பழைய கதைகளை…
ஏழுதியவர்
இரா. மதிராஜ்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

