நந்தன் கனகராஜ் கவிதைகள்

நந்தன் கனகராஜ் கவிதைகள்

 

பிரசன்னம்
Punjab: Cleanliness drive launched in flood-hit villages ...

அதிகாலையின்
மங்கலப்பாடல் வீட்டின்
ஒளியைத் துவக்கிவிடுகிறது
விரல் சிக்கனத்தில்
சிறு கோலம் கொண்ட
வாசலுக்குக்
கதிர்களிறங்கிச் சாளரம்
பட்டவிழ்கின்றன

புழக்கடையின் துவைப்புச்
சத்தப்பீதிக்கு
மரமும் சுவருமாக
தாவிக் கொண்டுள்ளன
அணில்கள்

குப்பை வண்டிக்கு
விநோத ஒலி
வீடுகளில் வீதிகளில்
வாரிக் கொண்டு
நிறைக்கிறது
மக்கும் குப்பை
மக்காத குப்பைக்காக
பிரித்துத்தர இறைஞ்சுபனிடம்
சென்ற பண்டிகைக்கு
உவந்த பத்து ரூபாயை
முந்நூற்றி இருபதாம்
முறையாகச் சொல்லிச்
சலிப்படைகிறார்கள்

அடையாள அட்டையின்
பூரிப்போடு வரும்
ஒப்பந்த ஊதியப்பணிப்பெண்
தூய்மைப் பணியை
அலைபேசிக்குப்
பதிவேற்றி
நகராட்சி ஆய்வாளருக்குப்
பார்வேடு செய்தளிக்கிறாள்

எதையும் மீறாதிருந்து
ஒழுங்கு செய்யும்
வீதி ஆலயத்தின்
நித்தப்பாடல் மின்மேளத்தின்
பின்னொட்டுக்குத்
தொடருகிறது

பாதசாரிகள் குனிந்து
கன்னத்திலிட்டும்
இருசக்கர ஓட்டிகள்
ஆக்சிலேட்டரை விடுத்த
ஒற்றைக்கையிலும்
பவ்யம் வைத்துக்
கடக்கிறார்கள்

கடவுளுக்கு நேரமில்லை

வாரிச் சுருட்டிய
வண்டிக்குப்பைக்கு
வலையிட்டு விட்டு
தொங்கிக்கொண்டே
போகிறார்.

வதம்
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் ...ஓரன்பை
அன்பு செய்கிறேன்
ஒவ்வோரன்பையும்
அன்பு செய்வது
கஷ்டமாகத்தான் உள்ளது.

நந்தன்கனகராஜ்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *