ஆரவாரம் இல்லை
அது எப்போதும் இருந்ததில்லைகோபதாபங்களை எப்படிக்காட்டிலும்கைகட்டி வாய்பொத்தி தலைவிழ்ந்து அடுத்தடுத்தஎன் தரிசனத்திற்காய் காத்துக்கிடப்பதுசமையலறை மட்டுமே.அது மட்டுமேஇரவிலும் பகலிலும்முழுவதுமாய் எனக்காக…

இனி எல்லாம் சுகமேநிறைய பேர் இங்கு ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்அவர்களைப்போலத்தான் நானும்அவன் கூறினான்
என்னைவிட உனக்கு வயிறு பெரிதென்றுஅவனுக்குத்தெரிந்திருக்கிறது பாவம்கூடவே என் மார்க் கச்சை விலக்கி
அழும் மகளுக்கு எப்படிச்சொல்வேன்என் தேசத்தின் கூக்குரலை.நாங்கள் இப்போது கடலை நோக்கிப் பயணப்படுகிறோம்அங்கு வானமற்ற பெருவெளி ஒன்றுண்டு.வசிப்பதற்கும் புசிப்பதற்கும் நேசிப்பதற்குமான நிலவொளி அது.ஊதிப்பருத்த இரண்டு பலூன்களில்
ஒன்றை கையிலும் மற்றொன்றை வாயிலும்
கவ்விக்கொண்ட மகளின் காலடிகீழேஎம்தேசத்தின் நாட்குறிப்போடு
மெல்லமெல்ல மேலேறுகின்றோம்.ஒரு அதிகாலைப்பொழுதில்தன் கூட்டினைச் சுமந்தலையும்
பட்டாம் பூச்சிகளாய் மாறியிருந்தோம்.நன்றிப.கணேஷ்வரி,மல்லி, திருவில்லிபுத்தூர்

