- காலையும் மாலையும்
அலங்கரித்து தயரானாள் பெண்
சமையலறை செல்ல
- ஓயாமல் பேசிக் கொண்டே
இருக்கிறாள் பெண்
வீட்டில் அசையா பொருளுடன்
- விசிலிட்ட குக்கர்
சமையலறையில்
மௌனமாய் அம்மா
- இயற்கையின் சீற்றம்
வெடித்தது பூமி
அம்மாவின் கோபம்
- டிஜிட்டல் இந்தியா
வேலைக்கு செல்லும் மனைவி
வீட்டுக் கணவர்
- 40 தோசை சுட்ட அம்மா
கடைசியாக
சாப்பிட்டாள் முதல் தோசையை
- பாரதி கனவு பொய்யானது
கற்பழிப்பு ஒரு நிகழ்வானது
சாக்கடையில் பெண் குழந்தை சடலம்
லிமரைக்கூ கவிதை:
ஒரு நாள் கொண்டாட்டம்
உலக மகளிர் தின விழா
பெண்களுக்கு வாழ்நாள் திண்டாட்டம்
எழுதியவர்
திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக்க மகிழ்ச்சி… எதார்த்தமான உயிரோட்டமான கவிதைகள்!வாழ்த்துகள்…