கவிதை | போம்ஸ் - Srivari Manju

ஸ்ரீவாரி மஞ்சுவின் கவிதைகள்

1.

சருகை
நழுவ விடுவதையறியாத
மரம் போல்….

காற்றிலுதிரும்
இதழையறியாத
பூவின் காம்பைப்போல்….

வானோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே உதிரும்
இறகையறியா
பறவையைப்போல்….

துடிப்பை நிறுத்துவதறியா
மெய் கூட
மெய்யாலும் அழகான வரம்தான்….

 

2.

உனக்கு
பிடிக்காததொன்றை..
எனக்கு
பிடிக்குமென்பதால்
உனக்கு பிடித்ததாக்கியதை விட
வேறெவை
அதிப்பெரும் நேசங்களாகிவிட
போகின்றன??…..

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. கே.பாலன் வடக்கத்தியான் பட்டி

    அருமையான வரிகள்… ஒப்பீடு அருமை சகோ… மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

    • கே.பாலன் வடக்கத்தியான் பட்டி

      மிக்க நன்று வாழ்த்துகள்

    • கே.பாலன் வடக்கத்தியான் பட்டி

      கவிதை தரும்
      உன் கண்களைத் தேடும்
      இந்த காலை அலாதியானது

      கனிகள் தரும்
      உன் இதழ்களை தேடும்
      எந்த காலையும் அற்புதமானது

      அதிசயமானவைகள்
      அதிகமானவைகள் அல்ல
      உன்னைப் போல அபூர்வமானவையே

      அர்த்தமற்ற வாழ்வில்
      ஆண்டுகள் ஆயிரம் நீள்வதை விட
      ஆத்மார்த்தமான உறவில்
      ஒரு நாழிகை நிகழ்வே போதுமானது…

      அந்த மலருக்குள்
      மகிழ்ந்திருக்கும் வண்டினத்திற்கு
      ஒவ்வொரு அதிகாலையும்
      பேரானந்தமாக்கி போகிறது

      பிடித்த கரங்களில்
      கன்னம் வைத்து கொள்வதெல்லாம்
      பிடித்த எல்லோருக்குமே வாய்ப்பதில்லை…

      நீயும் நானும்
      பிரிவதற்கு முன்
      பிரியப்பட்டது போல…

      கே.பாலன் வடக்கத்தியான் பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *