1
வரலாற்றுப் பானை
***************************
பானையில்
கடலேறி நிற்கும்
யவனத்தின் கலங்களை
சித்திரப் படுத்தியவள்
ஒருபோதும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காலடியில் கிடக்கின்ற
அந்தப்பானைதான்
கீழடியில் மேலெழுந்து
வரலாற்றைச்
சுமந்துவருமென்று.
2
பாமியான் புத்தன்
*************************
பாமியான் மலைமுகட்டில்
பரந்துவிரிந்திருக்கும்
புத்தனின் நெஞ்சில்
முதல்தோட்டா பாய்கிறது.
ஐந்தாம்நூற்றாண்டிலிருந்து
அருள்பாலித்தவர்
அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
சற்றைக்கெல்லாம்
சல்லடையாக்கும் நோக்கில்
சகட்டுமேனிக்கு புத்தனின்
மேனியெங்கும் தோட்டாக்கள்
துளையிடுகின்றன.
அவ்வளவுபெரியஉடலில்
இருக்கிறஇடைவெளியில்
ஜெலட்டின்குச்சிகளையும்
வெடிமருந்துகளையும்
திணித்து
பெயர்த்தெடுத்துவிட்டு
புன்னகைக்கிறார் ஓமர்.
இப்படித்தான்ஓர்நாள்
காந்தியையும் துளையிட்டார்கள்.
மதவாதத்திற்கு ஒரேமுகம்தான்.
பெயர்மட்டும்
மாற்றி மாற்றி
வைத்துக்கொள்கிறார்கள்.
எழுதியவர்
கௌ. ஆனந்தபிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.