தமிழ் கவிதைகள் - Tamil Poems
1
சுயரூபம்!
உன் சுயரூபம் தெரிந்து
உன்னை விட்டு விலகியது
என் மனது,
பசுதோல் போர்த்திய புலி
என்று தெரியாமல்,
பாழுங் கிணற்றில் வீழ்ந்து விட்டேன்,
நிஜம் எது நிழல் எது
என்று அறியாமல்,
நிர்க்கதியாக நின்று
விட்டேன்!
2
நான் தொலைத்த நாட் கள்!
பேசிய அந்த அழகிய நாட்கள் மீண்டும் வருமா!
கொஞ்சிய நிமிடங்கள்
மீண்டும் கிடைக்குமா!
அளவுக்கு அதிகமான சந்தோசத்தை,,,
அனுபவித்த தருணங்கள்
திரும்ப வருமா!
பேசிப் பேசிக் களைத்த
நாட் கள் அன்று!
பேச முடியாமல் தவிக்கும்
நாட்கள் இன்று!
கொஞ்சி சில நாள்
கெஞ்சி சில நாள்
வாழ்ந்த பசுமையான
நாட்கள் மறைந்து,,,
முகம் கூட பார்க்க
முடியாமல்
பரிதவிக்கும் நாட்கள் இன்று!
மனசெல்லாம் பட்டாம்பூச்சி
சிறகடித்து பறந்தது அன்று!
இதயம் கனமாகி,,,
கண்ணிர் சிந்தும் இன்று!
மனது கல்லாகி,,
கண்கள் குளமாகி,,
மௌனத்தில் நகர்கின்ற
நாட்கள் இன்று!
    அனுராதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “அனுராதாவின் கவிதைகள்”
  1. 📝மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *