கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு
உன் நிறத்தைச் சிவப்பாக்க
ஒவ்வொரு விளம்பரமும்
உத்தி செய்கிறது
என் நிறத்தின் கரிய ஆழத்தில்
என்னை மட்டுமே
பதியமிடுகிறேன்
நாம் இருவருமே
ஒரே நிலத்தில்
முளைத்து எழுந்தவர்கள்தான்
நம்மில் பேதமில்லை
என்ற போதிலும்
இந்த உலகம் உன்னை மட்டுமே
கவனம் கொள்கிறது
அதற்குத் தெரியாது
என் கரிய நிறம்
ஒளி ஊடுருவ முடியாத
பெரும் வனத்தின்
அடர்ந்த இருளுக்கு ஒப்பானது என்று!
எழுதியவர்
மஞ்சுளா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

