மராத்தி மொழியின் நவீன கவிதை அன்னை சாவித்திரிபாய் புலே மூலமே உருவானது. இவரது முதல் கவிதை தொகுப்பு ‘காப்யா புலே’ (Kabya phule) 1854 ல் வெளியிடப்பட்டது. அந்தவகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியர் ஒருவரின் முதல் கவிதைத்தொகுப்பு இதுவே!
இவரது இன்னொறு கவிதைத் தொகுப்பு 1891 ல் வெளியிடப்பட்டது. இதன் தலைப்பு Bavan Kashi Subodh Ratnakar. இது மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றின் கவிதை வடிவம். அன்னையின் கவிதைகளின் உட்பொருள் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு , கல்வியின் பெருமை என பலவகைப்பட்டவை. அனைத்தும் சமூக புரட்சியை நோக்கமாகக் கொண்டவை. சில கவிதைகள் கீழே.
சாவித்திரிபாய் புலே கவிதைகள்
Poems of Savitribai Phule
1)அறியாமை
———————
![]()
அவன் பெயர் அறியாமை
கெட்டியாக பிடிப்பீர்!அடிப்பீர்!
வாழ்க்கையைவிட்டு விரட்டுவீர்!
His name is ignorance
beat him grasping strongly
And keep him away from the life
2)முட்டாள்கள் யாவர்?
———————-

ஜோசியம்
பஞ்சாங்கம்
கைரேகை
இவற்றை
நம்புகிறவர்கள்
முட்டாள்கள்!
சொர்கம்
நரகம்
இவற்றை
சிந்திப்பவர்களும்தான்!
Fools believing in Astrology
Panchangas, Handline,
Lost in imagination of Heaven and Hell
3)சூத்திரன் யார்?
—————————–

சூத்திரன் என்பதன் நிஜப் பொருள் மண்ணின் மைந்தன்
வந்தேரி ராஜாக்கள் வைத்த பெயர் சூத்திரன்
ஈரானிய பார்ப்பானுக்கு
தோற்ற சூத்திரன் ஆனான் அடிமையாய்
பார்ப்பானும் பார்ப்பனியமும் ஆயின
அடிமையாய் ஆங்கிலேயனுக்கு
உண்மையில் சூத்திரர்களே
இந்தியாவின் சாமிகள்
அந்த சாமிகளின் பெயர்தான்
இந்தியர்கள்
நம் முன்னோர்கள் அஞ்சாநெஞ்சர்கள்
நாம் அனைவரும் அஞ்சாநெஞ்சர்களின் வழிவந்தவர்கள்
Real meaning of Shudra is native
Invader rulers imposed Shudra
Defeated Shudras become slave
Of Irani’s Brahmins & Brahmins
And Braminism slaves of the English
Really Shudras are the swami of India
Their name was indian
Our ancestors were very brave
We are their descendants.
4)ஆண் பிள்ளை என அழைப்பதெப்படி?
————————————————————

வெட்கமின்றி திண்ணுகிறான் வெட்டிவேலை கணவன்
வியர்வை சிந்தி உழைக்கின்றால்
பாவப்பட்ட மனைவி
காட்டுவிலங்கு வாழ்க்கையிலும்
காணமுடியா அவலம்
விலங்கு கூட அவனைப்போல் இல்லை
விளிக்க முடியுமா அவனை ‘ஆண்பிள்ளை’?
No place is there in animal life also
Wife work only while Husband ikept eating shamefully
No one is such an animal
How we can say him man?
5) பிற்பட்டது எதனால்?
-~~~~~~~~~~~~~~~~

சூத்திரர்களும்
ஆதி சூத்திரர்களும்
அறியாமையால் ஆனாரே பிற்பட்டோராய்!
ஆகித்தான் போனாரே
பிச்சைக்காரராய்!
கடவுளில் மதத்தில் வழிபாட்டில்
கண்மூடி வீழ்கின்றார்!
Shudra and Adhi Shudra
Backward by ignorance,
Became beggars,
Falling in Dev, religion and worship!
அன்னையின் கவிதைகள் அனைத்தும் மராத்தி மூலத்தில் இருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவரது கவிதைத் தொகுப்பு வெளிவந்து 165 ஆண்டுகள் கடந்தும் தமிழில் வெளிவராமல் இருப்பது வருத்தமே. அவ்வாறு கொண்டு வருவது தமிழகத்தின் இலக்கிய வரலாற்றுக்கும் சமூகநீதி வரலாற்றுக்கும் பெருமை சேர்க்கும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு
MS. Reeta,
Dr. Vinit Rai,
Book : First Indian Women Teacher
Savitribai Phule,
Educreation Publishing, New Delhi
தமிழில் : தேவிகாபுரம் சிவா

