1.கருத்துள்ள பாட்டை
இசையோடு பாடு
பாடலைக் கேட்டு
அதற்கேற்ப ஆடு
2.வாழ்க்கையில் தினந்தோறும்
வந்துவிடும் மாற்றம்
உழைப்பினால் கிடைக்கும்
உன்னத ஏற்றம்
3.காலையில் பருகும் தேநீர்
சுறுசுறுப்பைத் தந்துவிடும்
தினந்தோறும் நடைப்பயிற்சி
தேகத்தைக் காத்திடும்
4.மலைகள் சூழ்ந்து அழகாய்
மாட்சிபெறும் மலையகம்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
வளந்தரும் தாயகம்
5.காலத்தே பயிர் செய்தால்
பலன் தரும் விளைச்சல்
காலத்தைத் தவற விட்டால்
காலமெலாம் அலைச்சல்
6.மூலிகை வகைகளில்
எத்தனையோ மகத்துவம்
பயனறிந்து பாவித்தால்
அத்தனையும் மருத்துவம்
7.முடியும் என்று தெரிந்தால்
எடுத்துக் கொள்வோம் முயற்சி
முடியாது என்று தெரிந்தால்
எடுத்துக் கொள்வோம் பயிற்சி
8.காக்கையின் கூட்டில்
முட்டையிடும் குயில்
முருகனின் கோவிலில்
அகவுகிற மயில்
9.வட்டிக்கு வட்டி
விட்டவன் வாழ்வாகும்
வட்டி கொடுத்தவன்
வாழ்க்கைப் பாழாகும்

10.குளத்தில் அழகாய்
பூத்திருக்கும் ஆம்பல்
அழகை ரசித்தால்
அகலும் சோம்பல்
11.மரண வீட்டில் உறவுகள்
ஒன்று சேர்ந்து அழுதன
அடக்கம் முடிந்த உடன்
சொத்தைப் பிரித்துக் கொண்டன
சோ. ஸ்ரீதரன்
இலங்கை