Poems by A. Srinivasan

அ.சீனிவாசன் கவிதைகள்

1
ஒவ்வொருமுறையும்
கடைசியாக
அவள் கேட்க நினைப்பதும்
அவள் கேட்கக்கூடாதென
நான் விரும்புவதும்
ஒன்றாகவே இருக்கின்றது.

“அடுத்து எப்பப்பா ஊருக்கு
வர்ற?”

அவள் கேட்காமலே
நான் நினைத்துக் கொள்கிறேன்.
நான் சொல்லாமலே
அவளுக்கு பதில் கிடைத்துவிடுகிறது.

‘ வர்ரம்மா”

” வாப்பா”

2

சின்ன சின்ன ஆசை
‘இன்னுமொரு சாக்லெட்மா?
இன்னுமொரு கதைம்மா?
இன்னிக்கி உன்னோடு படுத்துக்கறன்மா
நானும் ஊருக்கு கூட வர்ரம்மா’
சின்ன சின்னதாய் தான்
தாயிடம் கேட்டிருப்போம்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுக் கெளம்பு
இந்தமுறை பண்டிகைக்கு ஒரு நாள் முன்னாடி வந்துடு
பாப்பாவை ஒரு ரெண்டு நாள் என்னுட்ட விட்டுட்டு போ
மாமாக்கு உடம்பு சரியில்லயாம் ஒரு போன் போட்டு விசாரி ‘
தாயும் சின்ன சின்னதாய் தான்
கேட்கத் தான் நினைக்கிறாள்.
எழுதியவர் 
அ.சீனிவாசன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. RADJA RANGARAMANUJAM

    என்றும் போல் எளிமையால் வென்றெடுக்கிறீர்கள் சார்.

    மனமார்ந்த வாழ்த்துகள் !

  2. த. ராஜவேலு

    “சின்ன சின்ன ஆசை” -அருமையான வரிகள். வாழ்த்துகள் சீனு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *