1.ஒற்றைக்காலில்
வெகு நேரமாக
கொக்கு.
அடிபட்ட காலுக்கு
கட்டுபோட வேண்டிய
கால்நடை மருத்துவர்
போக்குவரத்து நெரிசலில்
நான்கு கால்களில்.
****************************** ****
2. பலவந்தமாக
இமைகளைப் பிரித்து
கண்களைத்
திறந்தாள் மகள்.
பின்னர்
தேவைப்படவில்லை
தியானம்.
****************************** ****
3. தட்டிலிருந்த எலும்பை
சட்டை செய்யாது
தரையிலிருந்த
பூவை முகர்ந்து கொண்டிருந்தது
கவிஞர் வீட்டு நாய்க்குட்டி.
வளர்ப்பு சரியில்லை.
****************************** ****
4. அரை மணி நேரத்திற்குப்பின்
கடையில்
தூங்குவது போலத்தான்
இருந்தது
பூ வியாபாரியின்
முதலிரவு.
****************************** ****
5. தண்ணி லாரிக்காரர்
திருமணத்தில்
மழையோ மழை.
அரிசிக்கடைக்காரர் பெண்ணை
நிச்சயம் செய்ய வேண்டாமென்று
அன்றே சொன்னேன்
என்று அங்கலாய்த்தாள் ஆச்சி.
எழுதியவர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

