அ.சீனிவாசன் கவிதைகள் | அ.சீனிவாசன் | கவிதைகள் | கவிதை | https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதைகள்

 

அ.சீனிவாசன் கவிதைகள்

1…

பூ தெரிகிறது.
சமயத்தில் வேரும்
தெரிகிறது.
பூவுக்கும் வேருக்கும்
இடையில்
நடப்பது யாருக்குத் தெரிகிறது?

 

2…

உச்சியில் இருப்பவனுக்கு
குதிப்பதற்காவது
வழியிருக்கின்றது.
பள்ளத்தில்
இருப்பவனை
விரட்டாதீர்!

 

3….

ஒரு பசி
வீசிய வலையில்
இன்னொரு பசி
மாட்டிக் கொள்கிறது!

 

4….

சன்னல் மட்டும்
போதும் எனக்கு.
சன்னலைப் பதிப்பதற்காக
சுவரை எழுப்பிக்கொண்டேன்.

 

5…..

தேவதை
என்கிறார்கள்
விரல்களில்
ராட்சஸ நகங்கள்!

 

6….

காடுகளைப் பற்றிப்
படித்துக்கொண்டிருந்தோம்
காடுகள் அருமையாய்
இருந்தன.
காடுகளுக்குப் போக ஆரம்பித்தோம்

காணாமல் போயின!

 

7….

ஊறுகாயளவு
பொய் நல்லது
காதலுக்கும்
கவிதைக்கும்!!

 

எழுதியவர் 

அ.சீனிவாசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *