அம்மாவின் நிழல்
____________________
தேவை நிமித்தம்
வெளியில் செல்லும்
ஒவ்வொரு முறையும்
தன்னை மறைத்து வைத்து விட்டா
செல்கிறார் அம்மா
திரும்பி வந்ததும்
வீட்டில் நிகழ் சம்பவங்கள்
ஒவ்வொன்றையும் தவறாமல்
நிரல் படுத்துகிறார்
வீட்டின் எந்த அறைச் சுவரில்
பதுங்கியிருக்கக் கூடும்
அம்மாவின் நிழல்?
மறந்து வைத்தல்
___________________
என்னைத் தவறுதலாக
மறந்து வைத்து விட்டேன்
வீட்டின் நெருக்கடிகளுக்குள்
காரியால கோப்புகளுக்குள்
தெருவைக் கடந்து செல்லும்
பருவப் பெண்ணின் புன்னகைக்குள்
அனாதரவாகக் கைவிடப்பட்ட
பூனைக் குட்டியின் கத்தலுக்குள்
இப்படி எங்காவது இருக்கலாம்
ஆனால் எங்கென்றுதான்
சரியாக ஞாபகம் இல்லை
மறந்து வைப்பதும்
பின்னர் தேடி அலைவுறுவதும்
கண்டெடுப்பதுமாக
சுழல்கிறது வாழ்க்கை
ஓயா அலைச்சலும் புலம்பலுமான
இந்த ஒரேயொரு ஆயுளை
வாழ்ந்து தீர்ப்பதற்குள்ளாக
இன்னும் எத்தனைத் தடவைகள்
என்னை மறந்து வைக்க நேரிடுமோ?
எழுதியவர்
ஜமீல்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

