மு. அழகர்சாமியின் கவிதைகள் (Kavithaikal) | தமிழ் கவிதைகள், சிறந்த தமிழ் கவிதைகள்(Tamil Poetry) - Alagar Samy - https://bookday.in/

மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமியின் கவிதைகள்

1.தோற்றுப்போகிறோம்……..

எப்போதோ!!
ஒரு இரவில்
நீயும் நானும்
சண்டையிட்டுக்
கொள்கிறோம்
நடு இரவைத்தாண்டி…
நமக்கான சண்டையில்
மாட்டிக் கொண்டது
நம் பிள்ளையே!!
உனக்குப் புரிய வைப்பதில்
நானும்..
எனக்குப் புரியவைப்பதில்
நீயுமாய்..
நீளும் சண்டையில்
நமக்குப் புரியாமல் போனது
நம் பிள்ளையின்
மனசு..
என்னை எப்படியாவது
குற்றம் சுமத்தி
பிள்ளையிடம்.
கெட்டவனாக
சித்தரிக்க நீயும்…..
உன்னை கெட்டவளாக
சித்தரிக்க நானும்
போட்டி போட்டுக்
கொள்கிறோம்..
இந்த சண்டையில்
தினமும்
தோற்றுப்போவது
நாம் தான்…..
நம் பிள்ளையின்
அறிவுரையில்…….
 2.சொந்தக்காரி 
எதிர்பாராமல்
வந்த அலைபேசி
அழைப்பு…
நீங்க
எப்படி இருக்கீங்க ????
எனும்
நலம் விசாரிப்போடு……
இப்படியொரு…
பூவினும் மென்மையான
குரலை
இதுவரையில்
அலைபேசியில்
கேட்டதில்லை….
அப்படியே!
என் பால்ய வயதில்
பேசியவர்கள்
குரலையெல்லாம்
ஒப்பிட்டுப்பார்த்தேன்..
புலப்படவில்லை..
இப்பொழுது மாதிரி
அலைபேசியில்
பேசிப்பழகியிருந்தால்
இவள்தான்.
என அடையாளம்
கண்டிருப்பேன்..
யாராக
இருக்கும்.என
யோசித்து இருக்கையில்
உறவு முறை
பெயர் சொல்லி
அன்போடு ..அழைத்தாள்..
நீங்கள்  ஆசிரியர்
எனத்தெரியும்..
இப்ப
கவிதைகள்
எழுதுறீங்களாமே!
அதுவும்
காதல் கவிதைகளும்..
என
பேசிக்கொண்டே இருந்தாள்…..
அத்தனை காதல்
கவிதைகளுக்கும்
அவள்தான்
சொந்தக்காரி என்று..
தெரியாமல்…….
எழுதியவர் : 
மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *