1. ஆலோபிளாக்குகளும்
சாலோபிளாக்குகளும்
வந்தபோதிலும்
இன்னும்
வேம்புவின் கீழ்
மூன்று செங்கல்களில்தான்
காட்சியளிக்கிறார்
நண்பனின் கடவுள்
2. அன்னையின் அன்புக்காக
ஏங்குபவன்
வீதியில் யாசிக்கும்
முதிர்ந்தவளிடம்
உணவளித்து யாசிக்கிறான்
அன்பை..
3. சூடாக நான் குளிப்பதற்கு
சூடாகிக் கொண்டிருக்கிறது
விறகு அடுப்பில்
ஒரு பழைய பானை
4. சாதியில் மட்டுமல்ல
எண் சாத்திரங்களுக்குள்ளேயும்
புழுங்கிக் கொண்டிருக்கிறது
எட்டு
5. நான்கு பேர்களுக்குக்
காட்சிப் பிழையாகத் தெரிந்தவள்;
ஐந்தாவதாக
ஆண்மகனை அடைந்தாள்
மணமகனாக..
எழுதியவர்
ஜேபி நீக்கிழார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

