1.பறை
மாடறுக்கும் மாடசாமியிடம்
கடனாகக் கேட்டு வாங்கிய மாட்டு ஜவ்வை
பண்ணையார் வீட்டில்
கொடுத்த கொட்டாங்காச்சியில்
மூடி இறுக்கி
வெட்ட வெயிலில் காய வைத்து
கொதித்து நெருப்பென காயும்
சூரியனிடம் முகம் காட்டி வெம்மையேறிய
அப்பறையை ஊரெங்கும்
அடித்து விடுதலையின்
நெருப்பைப் பற்ற வைக்கிறான்
செத்த மாடு தூக்கும்
குருசாமியின் பேரனொருவன் ,
பறையிசை
கேட்கும் உன் வீடு
அப்பறை இசையினை
வாசிக்கும் என் வீடு
உன் வீடு என் வீடு
இரு வீட்டிற்கும்
இடைப்பட்ட தூரத்தில்
நதியாக
ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு சுவர்
அச்சுவரில்
உன் பெயர் அந்த பக்கமும்
என் பெயர் இந்த பக்கமும்
எழுதி வைத்திருக்கும்
அச்சுவரை
படமெடுத்து கொண்டிருக்கிறது
ஒரு வானம்
அது நீல வானமாகவே மின்னிக்கொண்டிருக்கிறது
காலம் காலமாய்
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.