1
ஒரு வாய் சோறு
இருந்தா கொடு சாமி யென்கிற
யாரோ ஒரு
அம்மாவின் அழுகைக் குரல்
போதும் போதும் என்று
நான் தலையசைத்த போதும்
இன்னும் கொஞ்சம் தான் சாமி சாப்பிடு என்று
வாய் துருத்திய
என் அம்மாவின் குரல்
எங்கிருந்தோ கேட்கிறது
என் இதயத்துக்கு பக்கத்திலிருந்தவாறு
பாத்திரத்தோடு நிற்கும் அந்த அம்மாவின் நிழலாக ,
*
2
யார் யாரோ
வந்து அமர்ந்து பேசுவதும்
நலம் விசாரிப்பதும்
எழுந்து செல்வதுமாக இருக்கிறார்கள்
நானும் அக்காவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்
கடைசிவரைக்கும் வரவேயில்லை
நீண்ட நாட்களாக
எங்களுடன் திண்ணையில்
அமர்ந்து கடைசியாக
பேசிய அம்மாவின்
உடலை தரித்த ஒரு உருவம் கூட ,
*
3
ஏன்டா
மழையில் நனைஞ்ச
கொஞ்சம் நேரம்
எங்கியாவது
ஒதுங்கி இருக்க கூடாதா
இப்படி தொப்பரையா
நனைஞ்சிட்டியே யென நீளும்
அம்மாவின் கடுமையான சொற்களுக்குள் தான்
அமைதியாக
தடவிக்கொண்டிருக்கிறது
தன் மாராப்பு துணியால்
தலை துவட்டிடும்
அம்மாவின் தன்
மகன் மீதான தீராத
அன்பின் நிமித்தம் ,
எழுதியவர்
ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் பிறந்த பண்ருட்டி பகுதியில் இருந்து ஒரு கவிஞர் பூப்பது மிகுந்த மகிழ்ச்சியே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்