1
நல்ல நாள்
திருமணத்திற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக
பள்ளி செல்வதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக
குழந்தை பிறப்பதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக
மனை கட்டுவதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக
காதுகுத்த நல்ல நாள் பார்ப்பதற்காக
இப்படிக் கிழிக்கப்பட்ட காலண்டரில்
குறைக்கப்பட்ட தாள்கள்
நீண்டு கொண்டே போகின்றன
நல்ல நாட்களோடு கெட்ட நாள்களும் ஓட்டிக் கொள்கின்றன
ஒவ்வொரு முறையும் தவறிச் சென்ற உறவுகளின்
பிறப்பு நாட்களோடு
இறப்பு நாட்கள்….
2
யாசகம் கேட்பதில்லை
சிறகொடிந்த பறவையானது
தனது இரையைத் தேடி
ஒவ்வொரு முறையும்
பறக்க முயற்சிக்கும்
தனது கால்களை
அசைத்துப் பார்க்கும்
தனது கண்களில்
எங்கேயாவது இரை
உள்ளதா
எனத் தேடும்
தனது அலகினால்
பழத்தின் வாசத்தை
உள்ளிழுக்கும் இத்துணைப் போராட்டங்களுக்கு
இடையில் தனது
இரையைத் தேடும்
பறவையானது ஒருமுறை
கூட யாரிடமும்
யாசகம் கேட்பதில்லை…..
எழுதியவர்
ச. சத்தியபானு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

