1.
பறக்காத போதும்
இறக்கையை
விரித்துக் கொண்டே
இருக்கிறது
மின்விசிறி.
2.
மீள குழந்தையாக
தேயமுடியாததால்
டாடியாக
வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
3.
ஓடுவதை நிறுத்திக் கொண்ட
கடிகாரம்
சுவரிலிருந்து
இறங்கிக் கொண்டது.
ஓடுவதை நிறுத்திக் கொண்ட
அப்பா
சுவரில் தொங்க ஆரம்பித்தார்.
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை. தந்தையைப் பற்றிய கவிதை நான் அழுதுவிட்டேன்.
கவிதை வரிகள் அருமை. வாழ்த்துகள் 🌹