என்ன சொன்னாய் ?
நீ கவியா ?
இருந்தால் படைத்துக் காட்டு
நதி போன்ற மெளனத்தை..
ஆகாயம் போன்ற எல்லையற்ற விரிவை..
ரோஜாப் பூக்களைப் போன்ற கவர்ச்சியை..
அல்லது ஏதாவது சமுத்ரம் போன்ற அறிவுத்திறனை….
நதி, ஆகாயம், சமுத்ரம், மலைகள்,
மரங்கள், ரோஜாப் பூக்கள், மேகங்கள், சூரியன்
வயல்களில் மகிழ்ந்தாடும் கோதுமையின் கதிர்குலைகள்
மற்றும்
49 வயது
காற்றை தமக்குள் கேலி செய்வதை பார்த்த பிறகு
இப்போது எனக்கு அவை ஏதாவது சொல்கிறாதாயிருந்தால்…
நான் சுயமாகத் தான் கேள்வி கேட்கிறேன்
யார் கவி _ எப்படி கவி ?
மூலம் : அதுல் கனக் (ராஜஸ்தானி)
தமிழில் : வசந்ததீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.