கவிஞர் கவிஞர் இரா. இரவி எழுதிய "திரைச் சுவடுகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Poet Era Ravi's Thirai Suvadukal Book Review | www.bookday.in

கவிஞர் இரா. இரவி எழுதிய “திரைச் சுவடுகள்” – நூல் அறிமுகம்

“திரைச் சுவடுகள்” – நூல் அறிமுகம்

“55 திரைப்படங்களின் தொகுப்பு”

திரைப்பட விமர்சனக் கலை என்பது, திரைப்படங்களைப் பற்றிய ஒருவரின் எண்ணங்களையும், கருத்துக்களையும், விரிவான பகுப்பாய்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும்.

இது ஒரு திரைப்படத்தின் கலை நயம், கதைக்களம், இயக்கம், நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், சமூக தாக்கம் போன்ற பல கூறுகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதன் நன்மை தீமைகளை மதிப்பீடு செய்து, பொதுமக்களுக்கு புரியும் வகையில் தகவல்களை வழங்குவதாகும்.

திரைச்சுவடுகள் எனும் நூலில் தனது கருத்துக்களையும், எண்ணங்களையும், விமர்சனங்களையும் வாசகர்களுக்கு புரியும் வகையில் மிக அருமையாக பதிவு செய்து உள்ளார் நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி.

திரைப்பட விமர்சனங்கள் மூலம் கலைஞர்கள் தங்கள் படைப்புகளின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து, அடுத்தடுத்த படைப்புகளில் மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன.

சினிமா துறையை மேம்படுத்துதல்: விமர்சனங்கள் திரைப்படத் துறையில் ஒரு தொடர் உரையாடலை உருவாக்குவதன் மூலம், அதன் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.

திரைப்பட விமர்சனக் கலை என்பது வெறுமனே திரைப்படத்தை பாராட்டுவது அல்லது குறை கூறுவது மட்டுமல்ல, மாறாக திரைப்படங்களின் பின்னால் இருக்கும் கலை, சமூக, மற்றும் தொழில்நுட்ப கூறுகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றை திறம்பட வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கலை வடிவமாகும்.

அந்த வகையில் நூலாசிரியர் 55 திரைப்படங்களின் விமர்சனங்களை இந் நூலில் அறிமுகம் செய்வதோடு மிக சரியான முறையில் நேர்மையாக விமர்சனமும் செய்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

குறிப்பாக இந்த படம் தேசிய விருதை பெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

அரசு பள்ளிகளின் அவல நிலை எடுத்துக்காட்டி ஆசிரியர்கள் மனது வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னத படைப்பு.
அதுபோன்று சில ஆசிரியர்கள் பள்ளியிலேயே வட்டிக்கு விடுவது வகுப்பறையில் தூங்குவது வீட்டு வேலையை மாணவர்களிடம் வாங்குவது சத்துணவு பொருட்கள் கையாளர் செய்வது மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இதுபோன்ற விஷயங்களையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

உலகில் பிறந்த யாவரும் சமம். ஏழை பணக்காரன் பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும். தொலைக்காட்சியில் வரும் முன் ஏழைகள் நிம்மதியாக வாழ்ந்தனர். தொலைக்காட்சி வந்தபின் விளம்பரங்கள் நுகர்வு கலாச்சாரத்தை பரப்பி ஏழை சிறுவர்களின் மனதில் துன்பத்தை விதைக்கின்றன என்பதையும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலை படிப்பதன் மூலம் 55 திரைப்படங்களையும் பார்த்த அனுபவம் நிச்சயம் ஏற்படும். இன்றைய திரைப்படங்கள் எப்படி சீரழிவு கலாச்சாரத்தை வளர்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

நூலின் விவரங்கள்:

நூல்: “திரைச் சுவடுகள்”
நூலாசிரியர்: கவிஞர் இரா. இரவி
விலை: ரூ. 160/-
வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை – 600017
தொடர்பு எண்: 044 24342810.

எழுதியவர் : 

✍🏻 MJ. பிரபாகர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *