தமிழ்க் கவிதையும், ஆங்கில மொழியாக்கமும்: கடைசி இரவு விருந்து – இந்திரன் | ஆங்கிலத்தில் ஸ்ரீவத்ஸாTreason and betrayals have always been a part of history the world over. Julius Caesar was betrayed by his dear friends and the Son of God was betrayed by a disciple a century later. Black cats have always been known to have premonitions of impending disasters. Can you imagine how the course of history would have been altered if the host of this thought provoking poem penned by the renowned writer, translator, essayist, orator, art critic, fellow ex-banker, poet and my dear friend Indran Rajendran which has been reproduced here alongside an English translation by moi with prior permission from the poet, had taken appropriate action in cognisance of the black kitten’s behavior!

கடைசி இரவு விருந்து

சாப்பாட்டு மேசையில் பரிமாறப்படும்
பிட்சாவை என் மாமிசமாகவும்
கோக் குளிர்பானத்தை என் ரத்தமாகவும்
பரிமாறியபோது
மேசைக்கடியில் இருந்த அந்த கருப்பு நிற பூனைக்குட்டி
தாங்கமுடியாத பசியில் தொடர்ந்து கத்தியது.
ஆனால் நானோ
என்னோடு உணவை பகிர்ந்து கொண்டவர்களில்
42000 ரூபாய்க்காக
(அன்றைய 30 வெள்ளிக்காசுகளின் இன்றைய மதிப்பு)
யார் என்னை முத்தம் கொடுத்துக்
காட்டிக் கொடுக்கப்போகிறார்கள்
எனத் தெரியாத சோகத்தில் மூழ்கிக் கிடந்தேன்.
பசியில் வாடிய பூனைக் குட்டி
என் காலைப் பிராண்டத் தொடங்கியபோது
நான் காலை உதறிக் கொண்டு
பயத்தில் கத்தினேன்.
பரிசாரகர் என்னிடம் வந்து மரியாதையுடன் சொன்னார்:
“செல்லப் பிராணிகளை உடன் கொண்டு வரலாம்
என்பது இந்த ஓட்டலின் சிறப்பு அம்சம்.”
நான் என்னுடன் பார்ட்டிக்கு வந்திருந்த
பன்னிரண்டு பேரிடமும் அறிவித்தேன்.
“இதுவே இந்த ஓட்டலில்
நான் உங்களுக்கு அளிக்கப் போகும்
கடைசி இரவு விருந்து.”

இந்திரன் 6 , மார்ச்சு, 2018THE LAST SUPPER

When the pizza
served on the dining table
was my flesh
and the cold drink coke
was my blood,
the kitten under the table
kept mewing continously
in unbearable hunger.
But I lay drowned
in the grief of
not knowing
who among those
that shared a meal
is going to kiss
and betray me
for 42000 rupees
(Thirty pieces of silver
of those times
at present value).
When the kitten
sagging in hunger
started to scratch my foot,
I shook my leg
and shouted in fear.
The server came to me
and said respectfully,
“The speciality of this hotel
is that pets may be brought along.”
I announced
to the twelve people
who had come
to the party with me
“This will be
the last supper
I shall be
hosting you
at this hotel.”

~Sri 23:57 25.04.2021 :: Noida

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)