குனிந்தும்
வளைந்தும்
நெளிந்தும் செல்வதற்கு
அவர்கள் என்ன அமைச்சர்களா?
அநீதியை எதிர்த்து
நிமிர்ந்தே நிற்பார்கள்
அவர்கள் விவசாயிகள்.
அவர்கள்
இந்நிலத்தின்
வேர்கள்.
இம்மண்ணின்
நீரூற்றுகள்.
அதிகாரமிட்டலுக்கு
ஒருபோதும்
அஞ்சமாட்டார்கள்.
அவர்களே மாண்புமிகு
விவசாயிகள்.
வேளாண் சட்டத்தை ரத்து செய்.
