அ.சீனிவாசன் கவிதை | Tamil Kavithaikal poetry by A.Srinivasan - BookDay - https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதை

அ.சீனிவாசன் கவிதை

மணற்கொள்ளை இனி இல்லை
நதிநீர்ப் பங்கீடு பிரச்சனை இல்லவே இல்லை
ஆறுகளை தேசியமயமாக்கும் அவசியம்
இல்லை.

எல்லாவற்றிலும் கெமிக்கலென கதறியவன் தண்ணீரும் ஒரு கெமிக்கலென
சமாதானம் கற்றுவிட்டான்.

தாயை நட்டாற்றில் விட்டு பழகிக் கொண்டவன்
ஆற்றையும் கை கழுவ ஆயத்தமாகிறான் .

ஆற்றங்கரை
நாகரிகத்தின் தொட்டிலென சிலாகித்தவன்
ஆற்றில் கட்டில் போட்டு
குடும்பம் நடத்துகிறான் .

நதிக்கரையில் ஈமச்சடங்கு நடத்தியவன்
நதிக்கே ஈமச்சடங்கு புரிகிறான்.

‘ஆறு தன் வரலாறு கூறுகிறது’ என
கட்டுரை எழுதுகிறவன்
ஆறு இருந்ததையே
வரலாறாக ஆக்குகிறான்.

குற்றுயிரும் குலை உயிருமாய்
நகரும் நதியின் விரல் பிடித்து
ஜெ.சி.பியால்
சாலைத் தடங்களில் குறிப்பு எழுதுகிறான்
‘ என் சாவிற்கு நானே காரணம்
வேறு யாருமில்ல ‘.

இப்படித்தான்
ஒரு நதி ஒரு மழைக்காலத்தில்
சாலையில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறது!

எழுதியவர்  :

அ.சீனிவாசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *