அ.சீனிவாசன் கவிதை | a Tamil Poetry (Kavithai) by A . Srinivasan - ஆற்றை வரைவதை விடமணலை வரைவதுஎளிதாகத்தான் இருக்கிறதுஆனால்கவலையாக இருக்கிறது - https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதை

அ.சீனிவாசன் கவிதை

 

ஆற்றை வரைவதை விட
மணலை வரைவது
எளிதாகத்தான் இருக்கிறது
ஆனால்
கவலையாக இருக்கிறது.

ஆற்றைக் கடப்பதை விட
மணலைக் கடப்பது
எளிதாகத்தான் இருக்கிறது
ஆனால்
கவலையாக இருக்கிறது.

நீரை அள்ளுவதை விட
மணலை அள்ளுவது
இலாபகரமாகத்தான் இருக்கிறது
ஆனால்
கவலையாக இருக்கிறது.

கவலைப்படுவதன் மூலம்
கவலைக்குரிய விசயத்தை
மறைத்துவிடுவது
எளிதாகத்தான் இருக்கிறது
ஆனால்
கவலையாக இருக்கிறது.

என்ன ஆறு இருந்த இடத்தில்
ஆறு போல ஒன்று இருக்கிறது
அவ்வளவு தானே!

மனிதன் இருந்த இடத்தில்
மனிதன் போன்ற ஒருவனாக இருப்பவனுக்கு
இதில் கவலைப்பட என்ன
இருக்கிறது!

ஆனாலும் கவலையாக
இருக்கிறது.

 

எழுதியவர்: 

அ.சீனிவாசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. RADJA RANGARAMANUJAM

    எளிமையாக சொல்வதுபோல் சொல்லி அதன் வலிமையை உள்மன ஆழத்தை உணர வைப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
    வளர்ந்து வரும் நற்கவிஞர்.

    வாழ்த்துகள் !

  2. Mohan raj

    அருமை
    மனிதன் இருந்த இடத்தில்
    மனிதன் போன்று தான்
    இருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *