உடைக்க முடியாச் சிறகுகள்
______________________________
பறவைகளுக்கு
இரண்டு சிறகுகள் இருக்கின்றனவாம்
இருந்து தொலையட்டும்
அதனால் எனக்கென்ன
அதற்குச் சிறகுள்ள விடயம்
ஆச்சர்யமான ஒன்றல்ல
அது இயற்கையானது
எனதிரு புயங்களிலும்
நம்பிக்கையின் சிறகுகள்
ஆயிரம் இருக்கின்றன
ஆகாயத்தின் கீழ் வசிப்பதனால்
நான் எப்போதும்
பறந்து கொண்டுதான் வாழ்வேன்
வாழ்ந்து கொண்டுதான் பறப்பேன்
எனது பறத்தலை
யாரலும் தடுக்க முடியாது
பறவைகளின் சிறகுகளை
உடைக்க முடிந்த உங்களால்
எனது நம்பிக்கையின் சிறகுகளை
தகர்க்க முடியுமா என்ன?
காற்று உடையுமா
______________________
அழைப்பு விடுக்காமலே
என் அறைக்கு வந்து
தலை கோதி விடும் காற்றை
ஒரு முறையாது
வரைந்து பார்க்க வேண்டும்
அது அரூபமானதாக இருப்பதனால்
வர்ணங்கள் இருந்தும்
எப்படி வரைவதென்று தெரியாமல்
முழி பிதுங்கி நின்றேன்
ஊதிய பலூன் ஒன்றை
உடன் வரைந்து விட்டு
இதுதான் காற்றெனடந சொல்லி
நகர்ந்தாள் சிறுமி
ஆனால் பலூன் உடையும்
ஒவ்வொரு முறையும்
காற்று உடைந்துவிட்டதென
என்னிடம் முறையிட்டதில்லை சிறுமி
எழுதியவர்

ஜமீல்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

