ஏனோ கணேசன் காலையில்
எழுந்ததில் இருந்து
சந்தோசமாய் இருக்கிறார்.
நாளில் தொட்டதெல்லாம்
துலங்குகின்றது!
ஏனிந்த சந்தோசமென
அறிந்து கொண்டால்
எந்நாளையும் பொன்னாளாக்கிக்
கொள்ளலாமே என
ஒரு கணம் நினைத்தார்!
உடன் எதனால் என்று
அறிந்து கொண்டால்
அதை இழந்துவிடுவோமென்ற பயம்
சந்தோசத்தைத் துரத்திடுமோவென ஐயுற்றார்!
பாவம் இனம் புரியாத பயம்
அவருக்கெதற்கு!
இனம் புரியாத மகிழ்ச்சியில் அவர்
இருந்துவிட்டுப் போகட்டுமே!
நீங்களும் அவரைப் பார்த்தால்
என்ன ஒரே சந்தோசம்
என்று கேட்டுவிடாதீர்!
எழுதியவர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.