1
காடுகள் எரிந்தன
விலங்குகள் எரிந்தன
விளைநிலங்கள் எரிந்தன.
சுதந்திரம் எரிந்தது.
சமத்துவம் எரிந்தது.
சகோதரத்துவம் எரிந்தது.
சகிப்புத்தன்மை எரிந்தது.
மனிதம் எரிந்து கொண்டிருக்கிறது.
நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.
நீங்கள் கவிதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மனிதன் எரிவான்.
நீங்கள் எரியும் வரை கவிதை வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.
நான் எரியும் வரை கவிதை எழுதிக் கொண்டிருப்பேன்.
நீரோவும் தான் சாகும் வரை தான் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.
எனக்கு தேனீர்
கிடைத்து விட்டது.
2
எனக்குப் பிடித்த
ஆடையணிந்து
பிடித்த வண்ணத்தில்
பொட்டு வைத்து
பிடித்தமாதிரி
முன்புறம் சடையை
விட்டுக்கொண்டு
விடாமல்
என்னைப் பார்த்து
இன்னமும் சிரிக்கிறாள்
என்னவளாய் இருந்தவள்
டி.பி. யில்!
இன்னமும்
இருக்கின்றாள்…
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்