தங்கேஸ் கவிதைகள்…

தங்கேஸ் கவிதைகள்…

 

 

 

கவிதை 1

நீ இப்படியே என்னை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்
உன்னை அப்படியே எடுத்து
விழுங்கி விடுவேன் என்றேன்

எப்படி என்றாள்

பொதுவாக
என்னைப்போல் இல்லை
என் விழிகள்
அவை இரண்டும்

சுத்த
அசைவப் பிராணிகள் என்றேன்

கவிதை 2

நான் என்னவோ
அமைதியாகத்தான்
உன் அருகில் அமர்ந்திருக்கிறேன்
ஆனால் பரிக்குள் பாய்ந்து செல்லும்
அயிரை மீன்களைப் போல
என் அணுக்கள் அத்தனையும்
உன்னை நோக்கித்தான்
பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன

 

தங்கேஸ்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *