புகுந்த வீட்டில்
வாழ்ந்தது
ரெண்டு வருசம் தான்
புள்ளயில்லேன்னு
வெரட்டி விட்டுட்டு
வேற கல்யாணம்
பண்ணிக்கிட்டான்
புருசங்காரன்

பொறந்த இடமே கதின்னு
தம்பி வீட்டோடயே
ஒட்டிக்கிட்டு
வாழ்ந்து செத்த
கிழவிக்கு
திருவாடதொற ஆயான்னு
புருசன் ஊரே அடையாள
பெயரா போச்சு.

– மணிமாறன்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *