வெடித்த பலூனிலிருந்து
விடுபட்ட காற்று
காற்றோடு காற்றாகக் கலந்திருக்கலாம்
கவிதையில்
கடைசிச் சொல்லாய் அமர்ந்திருக்கலாம்
கண நேரத்தில்
கடலைக் கடந்திருக்கலாம்
பயணிக்கும் வாகன சக்கரத்தில் சேகரமாகி இருக்கலாம்
எதையும் அறியாமல்
காற்றைத் தேடி
காற்றில் அலைவுறுகிறது
பலூனுக்குச் சொந்தக்கார சிறுமியின் கை
கவிதை எழுதியவர் :
ச.முகிலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

