ந க  துறைவன் கவிதை ngthuraivan Kavithaikal

எங்கிருந்து தொடங்குவது?

 

என் கதை எங்கிருந்து தொடங்குவது?
அந்த குக்கிராமத்திலிருந்தா?
அந்த நகரத்திலிருந்தா?
எங்கிருந்து தொடங்கினாலும்
என் வாழ்க்கைக் கதையில்
நானே இல்லாமல் இருக்கிறேன்
நான் இருப்பவன்
நான் வாழ்பவன் அல்ல
நான் இறந்தவன் அல்ல
பிறகு என் கதை நானே
எப்படி எழுதுவது?
என் கதை யார் சேகரித்து வைத்திருப்பது?
என் கதை எழுதப்போவது யார்?
என் கதை முழுமையாக
எழுத அவரால் முடியுமா?
பார்த்ததை, கேட்டதை, யாரோ சொன்னதை,
சொல்லாததை வைத்து தானே
அவர் எழுத முடியும்
அதை எப்படி என் முழு கதையாக ஏற்பது?
அரைகுறையாக, விடுபட்ட
மறைக்கப்பட்ட சம்பவங்கள்
விமர்சகன் சொல்லும்போது
அடுத்த பதிப்பில் இடம் பெறுமா?
என் கதைக்கானவர் இன்றில்லை
என் கதை எழுதியவர்
என் கதை பிரதிகள் விற்றவர் இன்றில்லை
என் கதையே இன்று இங்கில்லை
என் கதையை நாளை யாரேனும்
ஒருவர் தேடி மறுபதிப்பு வெளியிடலாம்
அப்பொழுது, படித்துப் பாருங்கள்

அதில் நான் இருப்பது தெரியும்
நான் வாழ்ந்தது
நான் இறந்தது தெரியும்
என் கதை உங்களுக்கு
கொஞ்சமாவது புரியலாம்
அல்லது புரியாமல் போகலாம்
என் கதை தெரிந்து
என்னவாகும் போகிறது உங்களுக்கு…?எழுதியவர் 

ந க துறைவன்
வேலூர்  
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *