கவிதை | Kavithaikal | Poem | Book Day

மழைப் பேச்சு (கவிதை)

1
அருகிலேயே
அமரச் சொல்லி
அழகை அழகாய்
அள்ளிப் பருகி
அது,
அந்த,
அவங்க, என
அவஸ்தைப் பட்ட பின்
அப்புறம் ?….. என்ற
அந்த
அழகான சொல்லுக்கு
அதுவரை
அங்கு நடந்த
அத்தனையையும்
அழித்து விட்டு
அமைதியாய்
அடுத்த கவிதைக்கு
அகரம் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

2

மழை பெய்யாமல் இடைவேளை விட்ட தருணத்தில்
பெரும்புன்னகை செய்கின்றன சாலைகள்.

பிரியமானவர்களின் மூட்ஸ்விங்கை நினைவுபடுத்துகின்றன
ஏற்ற இறக்கமான எதிர்பாரா ஸ்பீடுபிரேக்கர்கள்.

சாலையில் ஆங்காங்கு முழுவதும் மூடாத பாதாளசாக்கடைகள்.
சாக்கடை தாண்டி, சாலையில் பெருக்கெடுக்கும் கழிவு நீர்.

மழைநீரோ கழிவுநீரோ அதைத் தெறிக்க விட்ட படி விரையும்
அடுத்தடுத்து
சக்கர வாகனங்கள்.

மழைநேர சாலையில்
வாகனங்களை
ஓட்டத் தெரியாமல்
இடம் வலமாகக் கட்டடிக்கும்
ஸ்கூட்டி பியூட்டிகள்.

அவர்களைப்
பின் தொடர்ந்து
வளைந்து நெளிந்து
பாம்பு போல வீலிங் செய்யும்
ஈராயிரத்தின் குழவிகள்.

மழையோடு வாரி இறைக்கப் படும் சேற்றுக்கும்

குடை பிடிக்கும் நடைபாதை வாசிகள்.

சாலைச் சகதிகளுக்கும் சரித்திரம் உண்டு.
வழுக்கி விடாமல் வரலாற்றை வாசிக்க
இப்போது
எக்ஸ்ட்ராவாகத் தேவை கொஞ்சம் பிரேக்குகள்.

 

எழுதியர் 

ச. பாரதி பிரகாஷ்
சின்னத்தடாகம்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *