யாருக்கும்
வேண்டாமென
தூக்கியெறியப்பட்ட கூழாங்கல்லாய்
உருண்டோடி கிடக்கிறது
ஒரு நதியின் அழு குரல் சத்தம்
மணல் மேடுகளை மேயும் லாரிகள்
நீர் குடிக்கு பெரும்
தண்ணீர் முதலைகள்
மீன்களின் உயிர்க் கண்ணீரில்
மிதக்கும் கானல் நீர்
தூரத்தில் ஆடு மேய்க்கும்
ஒரு சிறுவன் தன் மனப் பேனாவிலிருந்து எழுதுகிறான்
எங்கள் தென்பெண்ணை ஆறு
ஆறாக ஓடுகிறதென்று
தூரத்துப் பெயர் பலகையில்
இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறது
நாம் கண்ட பழைய ஆறு ,
*
விழித்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஜன்னலுக்கு வெளியே
என்னுடைய கனவையும்
சேர்த்தே அசைபோட்டுக் கொண்டிருக்கிறது
நிலவு
*
அம்மா தே
இப்போ
வந்துடுவாங்க அழுவாம
அப்பா பக்கத்திலே படுத்துக்க
நா உங்களுக்கு
காக்கா முட்டை கதை
சொல்றே நீங்க அப்பாவை
கெட்டியா கட்டி புடிச்சிகனு
தூங்குக
ஒரு ஊர்ல ஒரு காக்கா
இருந்திச்சா யென கதையை
சொல்ல ஆரம்பிக்க
வெளியில ஒரு காக்கா
“கா கா ” யென்று கரைய
நாங்க எல்லாரும்
திண்ணையை
நோக்கி ஓடியாந்து பார்த்தோம்
அம்மா பசங்களுக்காக
ஒரு கையிலில கொஞ்சம் கரும்பும்
கன்னு போட்டுக்குற
மாட்டுக்காக இன்னொரு
கையிலும் கருப்பஞ்சோலையும் கொண்டு வர
அம்மாவை தூரத்தில்
பாத்த குழந்தைகள்
கன்னுக்குட்டியாக துள்ளிக்குதிக்க
பால் சுரக்கும்
அன்பின் நிமித்தத்துல
அழகாகத்தான் முடியுது
எப்பொழுதும்
இருகரையையும்
மூழ்கடித்து பாய்ந்த
தண்ணீரின் ஓசை,
கவிதை எழுதியவர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான கவிதை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்