கவிதை: தீபாவளி பர்சேஸ் – வில்லியம்ஸ் ஆன்டனி 

கவிதை: தீபாவளி பர்சேஸ் – வில்லியம்ஸ் ஆன்டனி 



தீபாவளி பர்சேஸ்
***********************
குறைந்த விலையே
அதுதானென்றான்
இருக்கவே முடியாத
நிறமொன்றைக் கேட்டுவிட்டு
திருப்பிப் பார்க்காமல்
வந்து விட்டேன்
°°°°
உங்களுக்குத் தெரியுமே
ப்ராண்டட் ஷர்ட்களும்
அழுக்காகி விடுகிறது
°°°
ஆஃபர்களில் வாங்கும்
புதிய மாடல்கள்
பிள்ளைகளுக்காக
எக்ஸ்சேஞ் செய்ய முடியாத
கீறல் விழுந்த
அலைபேசிகள் நமக்காக
°°°°
அமேசானில் ரெண்டு
மிந்த்ராவில் ரெண்டு
ப்ளிப்கார்ட்டில் ரெண்டு
அப்புறம் போத்தீஸில் ரெண்டு
உள்ளூர் பொட்டிக்கில் ரெண்டு
அத்தனையும்
ஒரேயொரு தீபாவளிக்கு
°°°
இன்றோடு
இலவசத்தில்
வந்து சேர்ந்திருக்கும்
‘ப்ரஷர்’ குக்கர்களின் எண்ணிக்கை
ஐந்து
°°°°
உள்ளாடைகளுக்கு மட்டும்
ஒரு ஆயிரம் பட்ஜெட் என்பதெல்லாம்
ஓவர் யுவர் ஆனர்
°°°
காய்கறி
பழங்கள் வழியாக
வீட்டுக்குள் வரக்கூடும்
கோவிட் கிருமிகள்
புதுத் துணிகள் மூலம்
ஒருபோதும்
உள்ளே வராது
°°°
கிரடிட் டெபிட் அட்டைகளால்
நிரம்பியிருக்கும்
மணிபர்ஸின் பெயரை
உடனடியாக மாற்ற வேண்டும்
°°°
வில்லியம்ஸ் ஆன்டனி 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *