கவிதை: முடிவில்லாப்  பயணம் – நீ.சிந்து

கவிதை: முடிவில்லாப்  பயணம் – நீ.சிந்து

முடிவில்லாப்  பயணம் 

—————————————–

அந்த வயதான 

அழுக்குப் பாவாடை 

ஒருவனிடம் 

கையேந்தி நிற்கிறது

பஞ்சடைத்தன காதுகள்

உணவருந்திய அவன் 

கைகழுவி உதறிய 

தண்ணீர்த் துளிகள் 

இவள் முகத்தில் படவே 

உயிர்ப்புப் பெற்று 

தன் தேடுதல் பயணத்தைத் தொடர்ந்த 

அந்த வயிறு

பெற்ற பிள்ளைகளின்

எண்ணிக்கையோ

ஆறு!!!!!!!

Show 2 Comments

2 Comments

  1. ஆதித் சக்திவேல்

    கவிதையின் கரு அருமை.
    ஆதித் சக்திவேல்

    • நீ.சிந்து

      நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *