கவிதை: ஹிரோஷிமாவும் சில அணுகுண்டுகளும் –  நி.அமிருதீன்

கவிதை: ஹிரோஷிமாவும் சில அணுகுண்டுகளும் –  நி.அமிருதீன்

ஹிரோஷிமாவும் சில அணுகுண்டுகளும்

 

 அன்று

 ஹிரோஷிமாவிற்கு

அதிகாலையும்

 இருளாகவே

 விடிந்தது! -பெரும்

 வெடிச்சத்தத்தோடு !!

 

 வெடிச்சத்தம்

நின்ற பின்னும்

பரவியிருக்கும்

கந்தக வாடை வீசும்

புகை மண்டலங்கள்

ஆங்காங்கே

அடர்த்தியாய் !!

 

கண்ணுக்கெட்டிய வரை

சிதறிக்கிடக்கும்

சதைப் பிண்டங்கள்

கோரமாய் !!

 

பிரிந்து கிடந்த

பிஞ்சு விரல்கள்

 பரிதாபமாய் !!

 

சாலைகளில்

சரிந்து ஓடும் ரத்தம்

 சகதியாய் !!

 

உணர்வுகள் பிரிந்தும்

உயிர் உதிராத – சில

உடல்கள்!

பரிதவிப்பாய் !!

 

தலையிலிருந்து

விடுதலைபெற்று

வீதிக்கு வந்த- சிலரது

மூளைகள்!

சிதிலமாய் !!

 

தரையில் கழிவுகளாய்

மனிதக் குடல்கள்

அசிங்கமாய் !!

 

சிலருக்கு

சில இடங்களில் காயம்

பலருக்கு

உடலே காயமாய் !!

 

அலங்கரிக்கப்பட்ட

மணவறை – மாறியது

பிணவறையாய் !!

 

தெருவெங்கும்

மரண ஓலங்கள்

பிணக் குவியல்கள்

கொடூரமாய் !!

 

பிரிந்தவர்கள்

ஒன்று சேர்ந்தார்கள்

சடலங்களாய் !!

 

மருத்துவமனைகளில்

பல்லாயிரம் மக்கள்

திகைத்தவர்களாய் !!

 

பிணக் கிடங்கில்

பெற்றோரைத் தேடும்

பிஞ்சுகளின் பார்வைகள்

ஏக்கமாய் !!

 

பாலுக்காக

இறந்துவிட்ட தாயின்

மார்போடு போராடும்

மழலைகள்

பாவமாய் !!

 

ஆங்காங்கே

கருகிய மரங்களும்

கசங்கிய குடிசைகளும்

மீதியாய் !!

 

ஆரவாரமான

ஹிரோஷிமா

இப்போது

மயானக் காடாய் !!

 

இறைவா

என்று தீரும்

இந்த வெடிகுண்டு

நாசம் ?

……………    ………………………….. ………….

by

 நி.அமிருதீன்..

(06/08/1946…நாகசாகி ஹிரோஷிமா மீது குண்டு வீசப்பட்ட தினம்)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *