கவிதை: கற்பக மரமறு – இரா. இரமணன்

கவிதை: கற்பக மரமறு – இரா. இரமணன்

கற்பக மரமறு

குழந்தைமையைக் கொன்று
குழந்தைகள் தினம் கொண்டாடு

அடிப்படை அறுத்தெறிந்து
அரசியல்சாசன தினம் அனுசரி


இந்தியத்தை மாய்த்து
‘இந்தியாவில் செய்வோம்’
என்றியம்பு.

‘ஆத்மநிர்பர்’ ‘ஆத்மநிர்பர்’
அடித்து சொல்லு!
தன்னிறைவை அடித்துக் கொல்லு!
அந்நிய மூலதனம்
அரவணைத்துக் கொள்ளு!

காட்டை விற்று கள் குடி!
நாட்டை விற்று நாடகமாடு!

குல சொத்து விற்று
கோயில் கட்டு!

எல்ஐசி கற்பக மரமறுத்து
வல்லூறுகளுக்கு வரிசை செய்!

பிபிசிஎல் காமதேனு மடுவறுத்து
பேய்களுக்கு விருந்திடு.!

பிஎஸ்என்எல் கோபுரம் சாய்த்து
அம்பானிக்கு ஆலவட்டம் சுற்று!

நிலக்கரி சுரங்கம் திறந்துவிட்டு
அதானிகள் பை நிரப்பு!

மக்கள் உழைப்புத் தண்டவாளத்தில்
மன்னர்கள் ரதம் ஓடட்டும்

வேளாண் சட்டமிட்டு
வேந்தர்கள் கொட்டமிட
விவசாயி நட்டமிடட்டும்!

பழைய மனு தர்மம் வகுத்து
புதிய கல்விக் கொள்கை புகுத்து!

சூழல் கட்டுப்பாடு
சுத்தமாய் விலக்கி
மயிலோடு கொஞ்சு
மக்களோடு அஞ்சு!

இரா. இரமணன்

Show 1 Comment

1 Comment

  1. சுவேதா

    நம் அடிப்படை தேவையை சுரண்டி ஆடம்பரமாக வாழும் அரக்க கூட்டம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *