சட்டம்
பிணவறையின் முனகலோசை..
கடைமூடல் அறிவிப்பு
கொலைக்குத் தூண்டும்
கொடூரச் செயல்.
காவல் உடுப்புக்குள்
கம்பீரச் சட்டமீறல்.
கை ஓங்கி அடித்தாலும்
வாய்பொத்தி அழுவதே சட்டம்.
மலப்புழைக்குள் நுழைத்து
இரத்தம் சுவைத்த
காக்கி லத்திகள்.
பிணவறைக்குச் சென்றபின்
தகவல் அறிக்கை வாசித்தேன்..
சாமான்யன் கண்தோய்த்து
அதிகாரத்தின்
கதையெழுதியது
நியாயத்தராசின்
முள்.
மு.சரவணக் குமார், ஈரோடை.
தற்கால சூழலை விளக்கும்படியான கவிதை.தோழர் சரவணக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.
நடந்ததை கவிதையாக்கிய தோழருக்கு வாழ்த்துகள்.
அதிகாரத்தின் நவீன கதையை எழுதியது ஒரு நியாயத் தராசுவின் முள். அந்தக் கதையை கொஞ்சம் குத்திப் பார்க்கிறது இந்த முள்கவிதை .
நடந்ததை நினைத்துப் புலம்புகிறோம். நடக்காமல் இருக்க என்ன செய்கிறோம். என்னதான் நினைப்பது. சுதந்திரம் இருக்கிறது மனதில் இருக்கும் ஈரத்தைக் காட்ட..
அருமை எனச் சொல்வதா.வலிக்கிறது.
சமீபத்திய நிகழ்வுகளை சுறுக்கென்று சொல்லும் கவிதை. வாழ்த்துகள் கவிஞர் மு.சரவணக் குமார்.
தோழர் சரவணன் அவர்களின் கவிதை வரிகள் நடந்த நிகழ்வின் அநியாயத்தை கோடிட்டு காட்டுகிறது…கடக்க இயலா வரிகளோடு…நல்ல படைப்பு.. வாழ்த்துகள் தோழர்.👌💐
நடந்த உண்மையை முகத்திலடித்தாற் போல் கவிதையாக வடித்துள்ளீர்கள். மிக அருமையான கவிதை.
ஆசிரியர் உங்கள் கவிதை அருமையோ அருமை